இந்தோனேஷியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரெஸ் தீவில் சில தினங்களுக்கு முன்பு 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், கல்வி மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுக் கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்தன.
இடிபாடுகளில் சிக்கி முதற்கட்டமாக 47 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




