தவெக அரசு 100 நாட்களில் சாதித்ததை விட சருக்கியதே அதிகம்: மதுரையில் விமர்சனம்!

 

மதுரையில் இருந்து வெளியிட்ட வீடியோவில், தமிழக முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய அரசு, இந்த காலகட்டத்தில் சாதித்ததை விட சருக்கியதே அதிகம் என விமர்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ள நிலையில், 100 நாட்களில் ரூ.22,000 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. விவசாயிகளுக்கான குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானாலும், அவை போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் அரசு எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்பு படை ஆகிய அறிவிப்புகளும் முழுமையான பலனை வழங்கவில்லை என கூறப்பட்டது.

மேகதாது அணை விவகாரம், காவிரி நீர், மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றிலும் அரசு தடுமாற்றத்தை சந்திப்பதாக விமர்சிக்கப்பட்டது. மொத்தத்தில், 100 நாட்களில் தவெக அரசு சாதித்ததை விட சருக்கியதே அதிகம் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.

Read Previous

டெல்லி மெட்ரோவில் பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக புகார்: சிஐஎஸ்எஃப் வீரர் இடைநீக்கம்!

Read Next

92 வயதில் 2.15 மீட்டர் வேலியை தாண்டிய மூதாட்டி: வைரலாகும் காட்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular