தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த ஆசிரியரும், ஆசிரியையும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சக ஆசிரியரின் ஆசைக்காக மாணவி ஒருவரை ஆபாசமாக பேசக் கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே மாணவியை இதுபோன்ற செயலுக்கு கட்டாயப்படுத்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாணவியின் துணிச்சலான நடவடிக்கையால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.




