திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்! ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை!

 

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஆகஸ்ட் 18) ஒரே நாளில் 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ஒரே நாளில் ரூ.6.12 கோடி வசூலாகியுள்ளது. மேலும், 35,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

 

நேற்று மட்டும் சுமார் 4.16 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, நேரடி இலவச தரிசனத்திற்கான டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாத பக்தர்கள் சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

Read Previous

“காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே இல்லையா?” – கிருஷ்ணசாமி கண்டனம்!

Read Next

தமிழகத்தில் அதிகரிக்கும் உடல் பருமன்! 10 ஆண்டுகளில் உயிரிழப்புகள் 80% ஆகுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular