தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மின் கட்டணம் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.
மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விரைவாக உரிய தீர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மின்துறையில் நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்பி, துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி கோரிக்கை விடுத்தார்.




