சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 15 கிரவுண்ட் மின்வாரிய நிலத்தை மீட்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்வாரியத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதைவிட, உயர்நீதிமன்றம், அரசு மருத்துவமனை மற்றும் துறைமுகம் போன்ற முக்கிய இடங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது மிகப்பெரிய பொதுநல நோக்கம் எனக் குறிப்பிட்டனர்.
பொதுமக்களின் நலன் மற்றும் அத்தியாவசிய மின்சார சேவையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.




