படப்பையில் சோகம்! இடி, மின்னல் தாக்கி தந்தை-மகன் உயிரிழப்பு!

 

 

சென்னையை அடுத்த படப்பையில் கனமழை பெய்து வந்த நிலையில், இடி, மின்னல் தாக்கியதில் மீன் வியாபாரி சங்கர் (47) மற்றும் அவரது 9 வயது மகன் சந்திரன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அரசுப் பள்ளியில் இருந்து மகனை அழைத்துக்கொண்டு சங்கர் ஏரிக்கரை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

இளைஞர்கள் மீது தாக்குதல் புகார்.. காவல் நிலையம் சென்ற ராகுல் காந்தி!

Read Next

பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் புதிய திட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular