அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுகளை ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை!

 

 

சட்டப்பேரவையில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் பேச்சுகள் மற்றும் பகுதிகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் எச்சரித்துள்ளார்.

 

முன்னதாக, சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்படும் சில பேச்சுகள் நேரலையாக வெளியாகி, பின்னர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ்களாக பரவி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த அமைச்சர்கள், ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read Previous

அமைச்சர்கள் மீது கமிஷன் புகார்: அண்ணாமலையிடம் விசாரிக்க உத்தரவா?

Read Next

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular