“பாலுக்கு ரூ.50 கொடுங்கள்; எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு?” – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!

 

 

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அரசு அறிவித்துள்ள ரூ.3 விலை உயர்வு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை வழங்காமல் எம்எல்ஏக்களுக்கு கார்கள் வழங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மேலும், தங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் நாளை மறுநாள் முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தப் போவதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பான இந்தப் போராட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

Read Previous

எர்டோகனை கடுமையாக விமர்சித்த இஸ்ரேல்!

Read Next

சௌகார் ஜானகி உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular