2027 பொங்கல் பரிசு வேட்டி, சேலை விநியோகம்: ரூ.1.8 கோடிக்கு டெண்டர்; GPS கண்காணிப்பு கட்டாயம்!

2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகளை உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, துணி உற்பத்தி நிலையங்களில் தயாராகும் வேட்டி, சேலைகளைப் பாதுகாப்பாகவும் முறையாகவும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக வேட்டி, சேலைகளைப் போக்குவரத்து மூலம் கொண்டு சேர்க்க ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும், சரக்குகளைக் கொண்டு செல்லும் வாகனங்களின் பயணத்தைத் தொடர்ந்து கண்காணிக்கவும், போக்குவரத்துப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அனைத்து வாகனங்களிலும் GPS கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்டி, சேலைகள் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரேஷன் கடைகளைச் சென்றடையும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)