வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி! உடைந்த அரிசியின் அளவைக் குறைக்க மத்திய அரசு முடிவு!

ரேஷன் கடைகளில் இனி தரமான அரிசி! உடைந்த அரிசியின் அளவைக் குறைக்க மத்திய அரசு முடிவு!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு புதிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன்படி, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியில் உடைந்த அரிசியின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்போதைய நடைமுறையில் புழுங்கல் அரிசியில் அதிகபட்சமாக 16 சதவீதமும், பச்சரிசியில் 25 சதவீதமும் உடைந்த அரிசி இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய தர நிர்ணயத்தின்படி புழுங்கல் அரிசியில் 5 சதவீதமும், பச்சரிசியில் 10 சதவீதமும் மட்டுமே உடைந்த அரிசி இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மேம்படுத்தப்பட்ட தரத்திலான அரிசி விநியோகத் திட்டம் ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்திலும் புதிய தரக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் ரேஷன் அரிசி விநியோகத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்பைவிட மேம்பட்ட தரத்திலான அரிசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.