புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
விளையாட்டு

2029 சாம்பியன்ஸ் டிராபி முதல் 2031 உலகக் கோப்பை வரை – போட்டிகளை நடத்தும் இந்தியா!

2029 சாம்பியன்ஸ் டிராபி முதல் 2031 உலகக் கோப்பை வரை – போட்டிகளை நடத்தும் இந்தியா!

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்த உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தொடருக்கான போட்டிகள் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

 

இதனைத் தொடர்ந்து, 2031-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரையும் இந்தியா நடத்த உள்ளது. இந்தப் போட்டியை இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து நடத்தும் என ஐசிசி தெரிவித்துள்ளது. உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

இந்த இரண்டு முக்கிய கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி நடைபெறும் கால அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறவுள்ள முக்கிய சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்தும் நாடுகள் மற்றும் போட்டி தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.