பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் – ரூ.3,428 கோடிக்கு மேல் கடனுதவி!

தமிழகத்தில் பெண்களின் பொருளாதார வளர்ச்சியையும், சுயசார்பு நிலையையும் ஊக்குவிக்கும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், தொழில் தொடங்க விரும்பும் மகளிர் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நவம்பர் 2026 வரையிலான நிலவரப்படி மொத்தம் 41,369 பெண்களுக்கு ரூ.3,428.49 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் கடன் விவரங்களை அறிந்துகொள்ள விரும்பும் பெண்கள் 98840 00845 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)