திங்கள், நவம்பர் 16, 2026
உண்மையின் குரல்
சினிமா

ஜப்பான், பாங்காக்கில் தீவிரமாக நடைபெறும் சூர்யா 48 படப்பிடிப்பு.. நட்சத்திர பட்டாளம் இணைப்பு!

ஜப்பான், பாங்காக்கில் தீவிரமாக நடைபெறும் சூர்யா 48 படப்பிடிப்பு.. நட்சத்திர பட்டாளம் இணைப்பு!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீண்டும் இணைந்துள்ள 'சூர்யா 48' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜப்பான் மற்றும் பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, பிரகாஷ் ராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.