70 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.. கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்! தமிழக அரசியல் வட்டாரத்தில் சோகம்!

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 70 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக உறவினர்களும் அரசியல் கட்சியினரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
இந்த நிலையில், சற்று முன்பு வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுச் செய்தி அரசியல் வட்டாரத்திலும், அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)