வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ரூ.45 லட்சம் கடிகாரம் சர்ச்சை.. எனது வாட்ச் விலை ரூ.5,500 மட்டுமே என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

ரூ.45 லட்சம் கடிகாரம் சர்ச்சை.. எனது வாட்ச் விலை ரூ.5,500 மட்டுமே என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை ரூ.45 லட்சம் எனக் கூறி, அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், தனது கைக்கடிகாரத்தின் உண்மையான விலை குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே என்று தெரிவித்துள்ளார். ஒருவரின் உடை, நிறம் மற்றும் அணிகலன்கள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதே நேரத்தில், திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி ஒருவரை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற அவதூறு தகவல்களைப் பரப்பும் போலிச் செய்தி பரப்பும் குழுக்களை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.