அரசன் படத்திலிருந்து அனிருத் விலகினாரா? வதந்திகளுக்கு தாணு பதில்!

‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதனைத் தொடங்கி வைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, தனது ‘அரசன்’ திரைப்படம் குறித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, இப்படத்தின் முன்னோட்டக் காட்சி அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ‘அரசன்’ படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்தியில், இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த கலைப்புலி எஸ். தாணு, எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் இல்லாமல் யூகங்களின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளுக்கு தன்னால் பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதன் மூலம் அனிருத் படத்திலிருந்து விலகியதாக வெளியாகும் தகவல் குறித்து அவர் நேரடியாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.




கருத்துகள் (0)