சனி, நவம்பர் 21, 2026
உண்மையின் குரல்
சினிமா

கடும் குளிரிலும் 3,700 மீட்டர் உயர சிகரத்தை அடைந்த நடிகை கயாடு லோஹர்!

கடும் குளிரிலும் 3,700 மீட்டர் உயர சிகரத்தை அடைந்த நடிகை கயாடு லோஹர்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புக்யால் மலையேற்றப் பாதையில் நடிகை கயாடு லோஹர் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், சுமார் 3,700 மீட்டர் உயரத்தில் உள்ள மலைச்சிகரத்தை அவர் அடைந்துள்ளார்.

 

பனி போர்த்திய மலைகள், இயற்கை எழில் நிறைந்த சுற்றுப்புறங்கள் என தனது மலையேற்றப் பயணத்தின் அழகிய தருணங்களை புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ள கயாடு லோஹர், அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உயரமான மலைப்பகுதியில் நிலவும் குளிரையும் சவால்களையும் கடந்து இந்தப் பயணத்தை மேற்கொண்டது அவரது சாகச ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

 

இந்த அனுபவம் குறித்து அவர் தனது பதிவில், இது தனது பயணத்தின் சிறிய தொடக்கம் மட்டுமே என்றும், இன்னும் பல மலைச்சிகரங்களை அடைய வேண்டிய இலக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எப்போதும் ஒரு மலைப் பெண்ணாகவே இருக்க விரும்புவதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.