செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, சத்துணவு திட்டம்; EMIS பதிவேற்றம் செய்ய கல்வித்துறை அவசர உத்தரவு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, சத்துணவு திட்டம்; EMIS பதிவேற்றம் செய்ய கல்வித்துறை அவசர உத்தரவு!

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான நலத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அதில், நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சேர்ந்துள்ள மாணவர்களின் முழுமையான விவரங்களையும் உடனடியாக EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச சீருடை மற்றும் சத்துணவு திட்டங்களைச் சரியான முறையில் செயல்படுத்துவதற்கு இந்தப் பதிவுகள் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, கடந்த 02.11.2026 அன்று பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள் இன்னும் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலவரத்தைச் சரிபார்த்து, விடுபட்ட மாணவர்களின் விவரங்களை விரைந்து EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.