ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை!

சென்னையில் செயல்பட்டு வரும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையத்தின் வாயிலாக, தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முழு உடல் பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் கிடைக்கும் இந்தச் சிறப்பான மருத்துவ வசதி மூலம் ஏராளமான மக்கள் உடல்நலம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய குறிப்பிடத்தக்க சாதனையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பாராட்டியுள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் இதுபோன்ற முழு உடல் பரிசோதனை வசதிகளை சென்னையுடன் மட்டும் நிறுத்திவிடாமல், தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




கருத்துகள் (0)