செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டைவிரலை கடித்துக் குதறிய முன்னாள் போக்குவரத்து ஊழியர்; திருநெல்வேலியில் அதிர்ச்சி சம்பவம்!

அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டைவிரலை கடித்துக் குதறிய முன்னாள் போக்குவரத்து ஊழியர்; திருநெல்வேலியில் அதிர்ச்சி சம்பவம்!

திருநெல்வேலி பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் அரசுப் பேருந்தை இயக்கிச் சென்ற ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது கட்டைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

ஓட்டுநர் ரத்தினக்குமார் பேருந்தை இயக்கிச் சென்றபோது, எதிர்திசையில் போக்குவரத்து விதிகளை மீறி தவறான பாதையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வேகமாக வந்துள்ளார். இதனை கவனித்த ரத்தினக்குமார், அந்த நபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டிக்கேட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துக் கழக ஊழியர் சீனிவாசன், ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர் ஓட்டுநர் ரத்தினக்குமாரின் கட்டைவிரலை கடித்து குதறியதாகக் கூறப்படுகிறது.

 

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ரத்தினக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட இந்த நிலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.