செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

காவல் நிலையத்தில் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்: மகன் தர்ணா, மனைவி சிபிஐ விசாரணை கோரிக்கை!

காவல் நிலையத்தில் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்: மகன் தர்ணா, மனைவி சிபிஐ விசாரணை கோரிக்கை!

மதுரை மாவட்டம் செக்காணூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று அவரது மகன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் மனைவி காவல்துறையினர் தாக்கியதால்தான் தனது கணவர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மேலும், தனக்கு இருக்கும் ஒரே மகனுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற அச்சத்தை வெளிப்படுத்திய அவர், “என் பிள்ளை மட்டும் தான் எனக்குன்னு இருக்கான், அவனையும் கொன்ற வேண்டாம்னு சொல்லிடுங்க” என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலகிருஷ்ணனின் உயிரிழப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.