ஆரஞ்சு பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது? ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் முக்கிய தகவல்!

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழம், உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளதால் தினசரி உணவுப் பழக்கத்தில் ஆரஞ்சு பழத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
இருப்பினும், ஆரஞ்சு பழத்தில் இயற்கையாகவே சிட்ரிக் அமிலம் இருப்பதால், அதைச் சாப்பிடும் நேரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஆரஞ்சு பழத்தைச் சாப்பிடுவதையும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உட்கொள்வதையும் தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆரஞ்சு பழத்தைச் சாப்பிடுவது சிறந்த தேர்வாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெறுவதுடன், உணவுப் பழக்கத்திலும் சரியான முறையைப் பின்பற்ற முடியும். அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் அளவோடு உட்கொள்வது அவசியம்.




கருத்துகள் (0)