மூளை புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள்.. புறக்கணிக்கக் கூடாத 5 முக்கிய எச்சரிக்கைகள்!

மூளை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக உடலில் சில மாற்றங்களும் எச்சரிக்கை அறிகுறிகளும் தென்படக்கூடும். இத்தகைய அறிகுறிகளை சாதாரண உடல்நலப் பிரச்சனைகள் என்று நினைத்து அலட்சியப்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, தொடர்ந்து ஏற்படும் சில உடல் மாற்றங்களை கவனித்து உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
மூளை புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய முக்கியமான ஐந்து அறிகுறிகள் உள்ளன. காலையில் தூங்கி எழுந்தவுடன் ஏற்படும் தலைவலி, வேறு காரணம் இல்லாமல் அடிக்கடி வாந்தி வருவது, பார்வை மங்கலாகத் தெரிவது, திடீரென நினைவாற்றலில் குறைபாடு ஏற்படுவது ஆகியவை அவற்றில் அடங்கும். இதனுடன் பேசும்போது வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறுவது அல்லது நடக்கும்போது சமநிலையை இழப்பது போன்ற மாற்றங்களும் கவனிக்கப்பட வேண்டியவை.
இந்த அறிகுறிகள் அனைத்தும் மூளை புற்றுநோயை மட்டுமே குறிக்காது. பிற உடல்நலப் பிரச்சனைகளாலும் இவை ஏற்படலாம். இருப்பினும், அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தாலோ அல்லது புதிதாகத் தோன்றினாலோ மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது முக்கியம். குறிப்பாக திடீர் பேச்சுத் தடுமாற்றம், பார்வை இழப்பு அல்லது நடப்பதில் கடுமையான சிரமம் ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.




கருத்துகள் (0)