சனி, நவம்பர் 14, 2026
உண்மையின் குரல்
சினிமா

சூரி குடும்ப திருமண விழாவில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய்; வைரலாகும் புகைப்படங்கள்!

சூரி குடும்ப திருமண விழாவில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய்; வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் சூரியின் அண்ணன் மகனின் திருமண விழா மதுரையில் உறவினர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், தமிழக முதல்வர் விஜய்யின் மகனுமான இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவரது வருகை திருமண நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.

 

விழாவில் கலந்து கொண்ட ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சூரி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தமிழ்குமரன், நடிகர் சஞ்சீவ் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.