தனுஷ் அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.2.2 கோடியா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் அணிந்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவர் அணிந்திருந்த இந்த கடிகாரத்தின் மதிப்பு சுமார் ரூ.2.2 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'வான்கார்ட்' நிறுவனத்தின் 'ஆர்ப் ஃப்ளையிங் டூர்பில்லன்' மாடல் கைக்கடிகாரம்தான் இது எனக் கூறப்படுகிறது. 18 கேரட் ரோஸ் கோல்டு மற்றும் நீல நிற செராமிக் பொருட்களால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கடிகாரம், உலகம் முழுவதும் வெறும் 25 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அரிய வடிவமைப்பும் அதிக விலையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.




கருத்துகள் (0)