ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

EPFO குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயருமா? நவம்பர் 19-ல் முக்கிய ஆலோசனை!

EPFO குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயருமா? நவம்பர் 19-ல் முக்கிய ஆலோசனை!

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் EPFO குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.1,000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள EPFO அமைப்பின் 240-வது கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 

தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி, அதை உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

 

இந்நிலையில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் ஓய்வூதியதாரர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், EPFO கூட்டத்தில் அரசு எடுக்கப்போகும் முடிவை ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.