70 வயது முதியவர்களுக்கு வருமான வரம்பின்றி இலவச மருத்துவ சிகிச்சை வழங்க அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 70 வயதை நிறைவு செய்த முதியவர்கள் அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இல்லாமல் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் பயன்பெற உள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் புற்றுநோய் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை, உயர் தர மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட காப்பீட்டில் இடம்பெறும் அனைத்து மருத்துவ சேவைகளையும் பெற முடியும். அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகள் வழங்கப்படும்.
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்துள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களும், அந்தத் திட்டத்தில் சேராதவர்களும் முதியோர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். தகுதியான முதியவர்கள் இ-சேவை மையங்கள் மற்றும் அரசு காப்பீட்டுப் பதிவு மையங்கள் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.




கருத்துகள் (0)