கார்த்திகை முதல் நாளில் 3 அகல்விளக்குகள் ஏற்றி வழிபட்டால் என்ன பலன்?

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரும் கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் தொடங்குவது ஆன்மிக ரீதியாகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை நினைத்து வீடுகளிலும் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் முருகப்பெருமான் சன்னதியில் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகக் கோவில் குருக்கள் தெரிவிக்கின்றனர். வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், சொந்தமாக வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்றும் விரும்புபவர்கள் முருகன் சன்னதியில் மூன்று அகல்விளக்குகளை ஏற்றி மனமுருகி வழிபடலாம் எனக் கூறப்படுகிறது.
அதேபோல், குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியரும் மூன்று அகல்விளக்குகளை ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் மேற்கொள்ளப்படும் இந்தத் தீப வழிபாடு குடும்பத்தில் நலமும் வளமும் பெருக வேண்டும் என்ற பக்தர்களின் வேண்டுதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.




கருத்துகள் (0)