காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் செல்போன் டவர் மீது ஏறிய இளம்பெண்!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், காதலனுடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இளைஞரும் அந்தப் பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த இளம்பெண், இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறியுள்ளார். அவர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகத் தகவல் கிடைத்ததும் குடும்பத்தினரும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, கீழே இறங்கும்படி சமாதானப்படுத்தினர். இதையடுத்து இளம்பெண் டவரில் இருந்து பாதுகாப்பாக கீழே இறங்கினார்.




கருத்துகள் (0)