கோயிலில் தரிசனம் முடித்து திரும்பிய குடும்பத்தினர்: லாரி கவிழ்ந்து 4 பேர் பலி!

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற கது ஷியாம் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு டெல்லி நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினர் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருப்பு மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தீபக் குமார் (29), திவ்யா (28), சரிதா மற்றும் நிதின் (40) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியில் ஏற்றப்பட்டிருந்த பருப்பு மூட்டைகள் காரின் மீது விழுந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின்போது காரில் இருந்த 5 வயது சிறுவன் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளான். காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)