மனைவியையும் அவரது காதலனையும் கொலை செய்ததாக கணவர் மீது புகார்!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தாகா பகுதியில், மனைவி பூஜா மற்றும் அவரது காதலன் ரோஹித் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சோனு லஹ்ரி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு சோனு வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது, பூஜா தனது பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலன் ரோஹித்தை வீட்டிற்கு வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நள்ளிரவில் வீடு திரும்பிய சோனு, இருவரையும் படுக்கையறையில் பார்த்ததாகத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், கத்தியால் இருவரின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)