கோடை காலத்தை முன்னிட்டு 4,048 டாஸ்மாக் கடைகளில் புதிய குளிர்பதனப் பெட்டிகள்!

கோடை காலத்தில் பீர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் குளிர்பதன வசதிகளை மேம்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,048 டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களிலும் குளிர்பதனப் பெட்டிகளை அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடைகளில் நடைபெறும் விற்பனை அளவைப் பொறுத்து அவை ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு கடையின் விற்பனை நிலவரம் மற்றும் தேவையை ஆய்வு செய்து, அதற்கேற்ற எண்ணிக்கையில் குளிர்பதனப் பெட்டிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கடைகளை நேரில் ஆய்வு செய்து, தேவையான விவரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டில் உள்ள பழைய குளிர்பதனப் பெட்டிகளுக்குப் பதிலாக புதியவற்றை வாங்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)