சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கொரட்டூர் ரயில் நிலையத்தில் 3,500 போதை மாத்திரைகள், 1 கிலோ கஞ்சா பறிமுதல்!

கொரட்டூர் ரயில் நிலையத்தில் 3,500 போதை மாத்திரைகள், 1 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், 3,500 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 26 வயதுடைய அஜித்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மும்பையில் இருந்து ரயில் வழியாக போதைப்பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 26-ம் தேதி கொரட்டூர் ரயில் நிலையத்தில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த அஜித்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதுடன், அவரிடம் இருந்த பொருட்களையும் சோதனையிட்டனர். இந்த சோதனையில் 3,500 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

 

இந்த கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் காணும் வகையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் விற்பனை வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.