புதன், அக்டோபர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தேனி சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் ஒருவர் கைது: 15 பேருக்குத் தீவிர தேடுதல்!

தேனி சிறையிலிருந்து தப்பிய கைதிகளில் மேலும் ஒருவர் கைது: 15 பேருக்குத் தீவிர தேடுதல்!

 

 

தேனி மாவட்ட சிறையிலிருந்து காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய 17 கைதிகளில், தேவாரம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவரை ஆண்டிபட்டி அருகே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்பு சிறையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பிரவீன் என்பவர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது சிலம்பரசன் கைது செய்யப்பட்டுள்ளதால், பிடிபட்ட கைதிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

 

தப்பியோடிய மற்ற 15 கைதிகளையும் பிடிக்க 17 தனிப்படைகளைச் சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.