மகளுக்கு சுமையாக இருக்கக்கூடாது என உயிருடன் இருக்கும்போதே தனக்குத் தானே 13-ம் நாள் இறுதிச்சடங்கு செய்த 80 வயது முதியவர்!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர் மேற்கொண்ட வித்தியாசமான செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தான் உயிருடன் இருக்கும்போதே, இறந்த பிறகு செய்யப்படும் 13-ம் நாள் இறுதிச்சடங்குகளைத் தனக்குத்தானே அவர் நடத்திக்கொண்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பல்ஜோர் சிங் என்ற அந்த முதியவருக்கு ஆண் வாரிசுகள் யாரும் இல்லை. அவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். வயது முதிர்ந்த நிலையில் தனது மறைவுக்குப் பிறகு மகளுக்கு இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட எந்தவிதமான கூடுதல் சுமையும் ஏற்படக்கூடாது என்று அவர் நினைத்துள்ளார்.
இதன் காரணமாகவே, தனது இறப்புக்குப் பிறகு நடைபெற வேண்டிய 13-ம் நாள் காரியத்தைத் தான் உயிருடன் இருக்கும்போதே செய்து முடிக்க அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி, தனக்கான இறுதிச்சடங்கு நிகழ்வை அவரே முன்னின்று நடத்தியுள்ளார்.
மகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 80 வயதில் அவர் எடுத்துள்ள இந்த முடிவு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவரின் இந்தச் செயல் தற்போது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.




கருத்துகள் (0)