மாணவன் அகிலன் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி – சகோதரிக்கு அரசு வேலை!

கோவையில் சாதிய வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவன் அகிலனின் குடும்பத்தினரை அமைச்சர் சம்பத் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.6 லட்சம் நிதியுதவியையும் வழங்கினார்.
மேலும், அகிலனின் சகோதரிக்கு ஆனைகட்டி உண்டு உறைவிடப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார். மாணவனை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு நிதியுதவியுடன் வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.




கருத்துகள் (0)