புதன், அக்டோபர் 28, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வங்கக் கடலில் வலுப்பெறும் ‘அர்னாப்’ புயல்: ஆந்திரக் கடற்கரையில் நாளை கரையைக் கடக்க வாய்ப்பு!

வங்கக் கடலில் வலுப்பெறும் ‘அர்னாப்’ புயல்: ஆந்திரக் கடற்கரையில் நாளை கரையைக் கடக்க வாய்ப்பு!

 

 

வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்து, மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே சுமார் 360 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

புயல் நாளை (அக்.28) ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதியில், பாபட்லா–விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், காற்றின் வேகம் 140 கி.மீ. வரை அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.