மதுபோதையில் தகராறு: தம்பியை அடித்துக் கொன்றுவிட்டு அண்ணன் தலைமறைவு!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியைக் கட்டையால் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் அண்ணனைப் போலீசார் தேடி வருகின்றனர். இஸ்ரவேல் (50), சாமுவேல் (45) ஆகிய சகோதரர்கள் இருவரும் சமையல் மாஸ்டர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். நேற்று இரவு இருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது இஸ்ரவேல் கட்டையால் தாக்கியதில் சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு இஸ்ரவேல் அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர்.




கருத்துகள் (0)