சென்னையில் பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து!

சென்னை அம்பத்தூர் பாரதிநகரைச் சேர்ந்த பாண்டியன் (50), தனது சொகுசு காரில் கள்ளிக்குப்பம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். புதூர் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அருகே காரை நிறுத்த முயன்றபோது, பிரேக்குக்குப் பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. தொடர்ந்து, புதூர் காவல் உதவி மையத்தின் மீதும் கார் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள் காயமடைந்தனர். திடீரென நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




கருத்துகள் (0)