புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு.. பால் உற்பத்தியாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

பெண்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு.. பால் உற்பத்தியாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகையை உயர்த்தி அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதுவரை ரூ.60,000 ஆக வழங்கப்பட்டு வந்த திருமண உதவித்தொகை தற்போது ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளில் முக்கியமான மாற்றமாக அமைந்துள்ளது.

 

இதனுடன் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையிலும் தமிழக அரசு உயர்வு அறிவித்துள்ளது. பால் உற்பத்தியாளர் உயிரிழக்கும் சூழலில் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இறப்பு இழப்பீடு ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும், விபத்தில் சிக்கி இரண்டு உறுப்புகளை இழக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.2.25 லட்சமாக இருந்த இந்த உதவித்தொகை தற்போது ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தொடர்பான அரசாணைகள் தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.