பேருந்தில் முதியவருக்கு டீ வாங்கிக் கொடுத்து 3 பவுன் சங்கிலி திருட்டு!

சேலத்தில் இருந்து கரூருக்குப் பேருந்தில் பயணம் செய்த 72 வயது முதியவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சாமுவேல் சுந்தரபாண்டியன், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் அமர்ந்திருந்தபோது, சுமார் 40 வயதுடைய மர்ம நபர் ஒருவர் அவரிடம் பேச்சுக் கொடுத்து டீ வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
டீ குடித்த சிறிது நேரத்தில் முதியவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கரூர் பேருந்து நிலையத்தில் கண்விழித்தபோது, தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)