ஞாயிறு, அக்டோபர் 25, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக 3 பேர் மீது கத்திக்குத்து! ஒருவர் கைது!

நெல்லை அருகே முன்விரோதம் காரணமாக 3 பேர் மீது கத்திக்குத்து! ஒருவர் கைது!

 

 

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருவரங்கநேரி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக மூன்று பேர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசைராஜாவைத் தேடி இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல், அவர் அங்கு இல்லாததால் அவரது மாமா பெருமாள் (50), மனோகரன் (40), சண்முகவேல் (60) ஆகியோரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

 

இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூவரும் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக சுரேந்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தலைமறைவான மற்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.