பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தூரத்தைக் கடந்த வாயேஜர் 1.. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய வரலாற்றுச் சாதனை!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்திய வாயேஜர் 1 விண்கலம், தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. பூமியில் இருந்து ஏவப்பட்டு சுமார் 49 ஆண்டுகளாகத் தனது பயணத்தைத் தொடர்ந்து வரும் இந்த விண்கலம், இதுவரை எந்த மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலமும் சென்றடையாத தொலைவை எட்டியுள்ளது.
தொடக்கத்தில் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட வாயேஜர் 1, அந்தப் பணிகளை நிறைவு செய்த பின்னரும் தனது பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. சூரிய குடும்பத்தின் எல்லைப் பகுதிகளைக் கடந்து விண்மீன் இடைவெளியை நோக்கிப் பயணித்து வரும் இந்த விண்கலம், தற்போது பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டியுள்ளது.
ஒரு ஒளி நாள் என்பது ஒளி ஒரு நாளில் கடக்கும் தூரத்தைக் குறிக்கிறது. இதன் அளவு சுமார் 2,596 கோடி கிலோமீட்டர்கள் ஆகும். பூமியிலிருந்து இவ்வளவு தொலைவைக் கடந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை வாயேஜர் 1 பெற்றுள்ளது.
பல தசாப்தங்களாகத் தொடர்ந்து விண்வெளியில் பயணித்து வரும் இந்த விண்கலத்தின் சாதனை, மனிதர்களின் விண்வெளி ஆய்வுத் திறனையும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)