புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் திடீர் முடக்கம்.. பயனர்கள் கடும் அவதி!

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் திடீர் முடக்கம்.. பயனர்கள் கடும் அவதி!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு முக்கிய ஆன்லைன் சேவைகளில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐ-கிளவுட், ஆப் ஸ்டோர், ஆப்பிள் பே, ஆப்பிள் வாலட் மற்றும் ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் பயனர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

 

இந்தப் பாதிப்பு காரணமாக ஆப்பிள் கணக்குகளில் உள்நுழைவது, கிளவுட் சேவைகள் மூலம் தகவல்களை அணுகுவது மற்றும் வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்வது போன்றவற்றில் பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பயனர்கள் தங்களது புகார்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே, இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சைபர் தாக்குதலால் ஏற்பட்டது அல்ல என்று ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சேவைகளை மீண்டும் வழக்கமான நிலைக்குக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.