வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் பரிந்துரை அல்காரிதத்தில் மாற்றம்.. பாதுகாப்பு புகார்கள் பாதியாக குறைந்ததாக மெட்டா தகவல்!

இன்ஸ்டாகிராம் பரிந்துரை அல்காரிதத்தில் மாற்றம்.. பாதுகாப்பு புகார்கள் பாதியாக குறைந்ததாக மெட்டா தகவல்!

இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியாகத் தூண்டும் பதிவுகள் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்கள் பயனாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராமின் பரிந்துரை அல்காரிதத்தில் மெட்டா நிறுவனம் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், பதிவுகள் பயனாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பாகவே அவற்றை ஆய்வு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற மற்றும் பாதுகாப்பற்ற உள்ளடக்கங்கள் பயனாளர்களின் பார்வைக்குச் செல்வதைத் தடுப்பதே நிறுவனத்தின் நோக்கமாகும்.

 

இந்த மாற்றங்களின் விளைவாக, கடந்த ஓராண்டில் பாதுகாப்பு தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.