ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்கள்; மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு!

ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்கள்; மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை, மகளிர் சுயஉதவிக் குழுவினரைத் தற்காலிகமாகப் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1,890 பணியிடங்களில் தேவைக்கேற்ப மகளிர் சுயஉதவிக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

இந்தத் தற்காலிகப் பணிக்கு தினசரி ரூ.400 ஊதியம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், விற்பனையாளர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ரூ.7,500-ம், கட்டுநர்களுக்கு ரூ.6,600-ம் ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நிரந்தர ஆட்கள் நியமிக்கப்படும் வரையிலேயே இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்கும். நிரந்தர நியமனப் பணிகள் நிறைவடைந்ததும், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் தற்காலிகப் பணி முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.