ஞாயிறு, நவம்பர் 15, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திண்டுக்கல்லில் பயங்கர விபத்து.. சாலையில் கொட்டிய 25 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்!

திண்டுக்கல்லில் பயங்கர விபத்து.. சாலையில் கொட்டிய 25 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்!

திண்டுக்கல் பகுதியில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியதால், அதிலிருந்த சுமார் 25 ஆயிரம் லிட்டர் அமிலம் சாலையில் கசிந்து பரவியது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது.

 

ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டில் இருந்து வெளியேறும் நீராவியை சுவாசிப்பதால் தொண்டையில் அரிப்பு, கரகரப்பு, கண்களில் எரிச்சல் மற்றும் தோலில் அரிப்பு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விபத்து ஏற்பட்ட பகுதி தொடர்பாக அச்சம் நிலவியது.

 

தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். சாலையில் கசிந்து பரவியிருந்த அமிலத்தின் செறிவைக் குறைக்கும் வகையில் அதிகளவு தண்ணீரைப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மூலம் அமிலம் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆபத்தான ரசாயனப் பொருள் சாலையில் கசிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.