ரூ.233.50 கோடி ஆண்டு வருவாய்! தமிழகக் கோயில்களில் பழனி முருகன் கோயில் முதலிடம்!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், அதிக ஆண்டு வருவாய் ஈட்டும் கோயில்களின் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் ஆண்டு வருவாய் ரூ.233.50 கோடியாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 கோயில்களின் மொத்த ஆண்டு வருவாய் ரூ.941.99 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோயில்களில் கிடைக்கும் வருவாய் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அன்னதானத் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.




கருத்துகள் (0)