சபரிமலை நெய் விநியோகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு? ஒப்பந்ததாரர் கைது!

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனுப்பப்பட வேண்டிய நெய்யில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், போக்குவரத்து ஒப்பந்ததாரர் எஸ்.எஸ். பினுவை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர். மில்மா நிறுவனத்திலிருந்து கோயிலுக்கு அனுப்பப்பட்ட 11,040 கிலோ நெய்யைத் தமிழகத்தில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவிட்டு, அதற்குப் பதிலாகக் குறைந்த விலை நெய் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் தேவசம்போர்டுக்கு சுமார் ரூ.2.5 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளது முதல் கைது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




கருத்துகள் (0)